மேலும் அறிய

Senthil Balaji: ஓட்டு போடுவதை விட இதுதான் முக்கியம்.. செந்தில் பாலாஜி சொன்ன விளக்கம்!

செந்தில் பாலாஜி கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தல் நாளில் அவர் தன் சொந்த தொகுதியில் வாக்களிக்கவில்லை.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தான் என்ன காரணத்தால் வாக்களிக்க செல்லவில்லை என்பதை முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவிகிதம் வாக்கு பதிவானது. இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 

வாக்களிக்க செல்லாத செந்தில் பாலாஜி

இந்த நிலையில் திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை தொகுதி மாறியது பெரும் பேசுபொருளானது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் திமுக 2021ம் ஆண்டு தேர்தலில் தோற்றது. அதனால் இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்திருந்தார். 

ஆனால் செந்தில் பாலாஜி வாக்குப்பதிவு நாளில் தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் புதுப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த மாலையில் வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் வரவில்லை. 

இதனிடையே கோவை மாவட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் தான் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “நான் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என நினைத்தேன். கோவை மாவட்டத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்று வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் கோவை மாவட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று ஆய்வு செய்திருந்தோம். அப்போது சில வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் வாக்களிக்கும் அறைக்குள் நின்று கொண்டிருந்தனர். பூத் ஏஜென்ட்டாக இல்லாதவர்களும் அங்கு இருந்தார்கள். அதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஏஜென்ட்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தாலும் அதிமுகவினர் பிரச்னையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றார்கள். தேர்தலை நிறுத்தக்கூடிய சூழலுக்கு போனார்கள். கடைசி 2,3 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்களால் நான் கோவை மாவட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவசியம் ஏற்பட்டதால் வாக்களிக்க செல்ல முடியவில்லை. கடைசிக்கட்டத்தில் பரபரப்பான சூழல் உண்டானதால் மக்கள் வாக்களிப்பதை கவனிக்கக்கூடிய பணியை ஆற்ற வேண்டியிருந்தது. வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றாலும் நான் போட்டியிடும் தொகுதியில் சுமூகமாக நடைபெற வேண்டிய கடமை உள்ளது. அதனால் செல்லவில்லை” என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு "பதில் சொல்லுங்கள் ஃப்ராடுகளே.." கரூர் விவகாரத்தில் தவெக கேள்வி!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான் என்ன? கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான்! கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
Embed widget