பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் - எஸ்டிபிஐ
கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடத்திய வெல்லட்டும் மதசார்பின்மை மாநாடு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்வு பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தக்கூடிய முன்னோட்டமாக அமைந்திருக்கிறது என எஸ்டிபிஐ மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது கூறினார்.
கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்துல் ஹமீது - எஸ்டிபிஐ - மாநிலத் துணைத் தலைவர் செய்தியாளரை சந்தித்தபோது, “வரும் நாடாளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி அனைத்து தொகுதிகளிலும் களப்பணி ஆற்றும் வகையில் செயல்பட வேண்டும் . கூட்டணியோடு வரும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதால் கூட்டணி பாராட்டும் வகையில் எஸ்டிபிஐ கட்சி செயல்பாடு இருக்கும். நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிமைப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் எங்களின் தேர்தல் களப்பணி இருக்கும். அதற்கு முன்னோட்டமாக ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடத்திய வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்வு பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தக்கூடிய முன்னோட்டமாக அமைந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போதைய தமிழகத்தின் சூழல் அண்ணா திராவிட கழகம் கூட்டணி என்ற நிலையில் மீண்டும் பழைய தமிழகமாக வருகிற பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாறி இருப்பதை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சி அதில் முக்கிய பங்காற்றி உள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற முனைப்பில் உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம். அதிமுகவில் தொகுதிகள் கேட்டிருக்கிறோம். இன்னும் ஓரிரு இசைவுகள் வந்திருக்கின்றது. இன்னும் பிற கட்சிகள் இணைய இருப்பதால் அதன் பிறகு முடிவுகள் எடுக்கப்பட்டு தொகுதிகள் வழங்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “என்ஐஏ எல்லாரும் எதிர்க்க வேண்டிய எல்லோருடைய கடமையாகி விட்டது. ஆரம்பத்தில் சில கட்சிகள், அமைப்புகள் அவர்களுக்கு வேலை செய்தார்கள், திறந்து விட்ட அமைப்புகளாக மாறிவிட்டது சாதாரணமாக பணப்புழக்கங்கள் தெருவில் சண்டை போடும் நபர்கள் அவர்களை விசாரிக்கக்கூடிய நபர்களாக என்ஐஏ மாறிவிட்டது. தமிழக அரசு கூடுதல் கவன செலுத்த வேண்டும் எந்த மாநிலத்தில் இல்லாவிட்டாலும் தமிழக மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சலுகைகளை அமைத்துக் கொடுத்த அரசு எனவே மாநில அரசு தடுக்கக்கூடிய தமிழக அரசுக்கு உள்ளது. பொதுமக்கள் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அச்சத்தை ஏற்படுத்தும் என்ஐஏ அமைப்பு கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக குரல்களை எழுப்ப வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.