மேலும் அறிய

சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்

குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?- ஈபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் மே தினத்தன்று மட்டுமே சிவப்பு சட்டை அணிவதாகவும் உண்மையிலேயே அதன்மீது அக்கறை இருக்குமானால், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர்- நிறுவனம்- அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பேருந்தில் சோதனை, நள்ளிரவில் வீடு புகுந்து கைது

இந்த நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன்.

அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின்

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Miss You Teaser : அறுதப்பழைய காதல் கதையில் சித்தார்த்...மிஸ் யூ பட டீசர் இதோ
Miss You Teaser : அறுதப்பழைய காதல் கதையில் சித்தார்த்...மிஸ் யூ பட டீசர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்புThiruvarur News : தந்தை தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையாளர் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Miss You Teaser : அறுதப்பழைய காதல் கதையில் சித்தார்த்...மிஸ் யூ பட டீசர் இதோ
Miss You Teaser : அறுதப்பழைய காதல் கதையில் சித்தார்த்...மிஸ் யூ பட டீசர் இதோ
Chennai Rains:
Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!
உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா?.... இப்படியா தண்டனை கொடுப்பீங்க..!
உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா?.... இப்படியா தண்டனை கொடுப்பீங்க..!
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
TN Rain Update: சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை, 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை, 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Embed widget