கரூர்: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணி தொடக்கம்
இதனால் இந்த ஆண்டு சாம்பா சாகுபடி கால தாமதமாக தொடங்கியது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் எப்போதும் சம்பா சாகுபடி 7 ஆயிரம் ஏக்கரை தொட்டுவிடும். இதனால் இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது.
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கின.
சம்பா சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இடுப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஒரே விலை போன்ற காரணத்தால் விவசாயம் செய்தும் லாபம் இல்லாததால் சாகுபடி செய்யலாமா, வேண்டாமா என்று விவசாயிகள் இரு மனதோடு இருந்தனர். இதனால் இந்த ஆண்டு சாம்பா சாகுபடி கால தாமதமாக தொடங்கியது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் எப்போதும் சம்பா சாகுபடி 7 ஆயிரம் ஏக்கரை தொட்டுவிடும். இதனால் இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது.
மிகவும் காலதாமதமாக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்ட தால் பல பகுதிகளில் இப்போதுதான் பூட்டு
வாங்கி பயிர்கள் தயாராகி வருகின்றன. இதனால் அறுவடைப்பணிகள் பொங்கல் பண்டிகை சமயத்தில் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லாலாபேட்டை அடுத்த மகிழப்பட்டி பகுதியில் அறுவடை பணி தொடங்கப்பட்டது. பணிகளை இயந்திரமூலம் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இயந்திர அறுவடைக்கு வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரத்து 100 வசூலிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் அறுவடை செய்ய இடத்தை பொறுத்து இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் கூட ஆகலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பிப்ரவரி மாதத்திற்குள் அறுவடை பணிகள் முழுமை பெறும் என்று தெரிகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாலாபேட்டை பகுதிகளில் படகு போட்டி
கிருஷ்ணராயபுரம் லாலாபேட்டை பகுதிகளில் மீனவர் சங்கம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் லாலாபேட்டை வழியாக செல்லும் தென்கரை வாய்க்காலில் நடந்தது. இதில் ஒரு படகிற்கு இரண்டு பேர் விதம் சுடுப்பு போட வசதியாக இருந்தனர். இதில் மொத்தம் ஒன்பது படகுகளில் மொத்தம் 17 பேர் இருந்தனர். இதை அடுத்து ஒன்பது படகுகளும் தண்ணீர் செல்லும் எதிர் திசையில் சீறிப்பாய்ந்து சென்று திரும்பி வந்து இலக்கை அடைந்தது .இதில் சக்திவேல் அண்ட் சக்திவேல் முதலிடத்தையும் ,சங்கர் பாஸ்கர் இரண்டாவது இடமும் ரமேஷ் குமார் சக்திவேல் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதைஅடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி.
பண்டிதகாரன் புதூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 24ஆம் தேதி நடக்கிறது. பயிற்சியில் அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீடு, அமைப்பு கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறை, பசுந்தீவன உற்பத்தி, கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 24ஆம் தேதி காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் பங்கு கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு அலுவலக தொலைபேசி எண்கள் தொடர்பு கொள்ளுமாறும் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அருணாச்சலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
.