ADMK: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு - மா.செ.க்கள் கூட்டம் நடந்தபோதே துணிகரம்..! என்ன நடந்தது..?
சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த கட்சி பிரமுகரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த கட்சி பிரமுகரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 லட்சம் பணம் திருட்டு:
அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சினிமாகாளியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவகத்திலேயே இத்தகைய திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

