மேலும் அறிய
Advertisement
1,008 சிறப்பு குழந்தைகளை திருப்பதி அழைத்துச் சென்ற ரோட்டரி சங்கம்..சாத்தியமானது எப்படி?
Tirupati Temple:திருப்பதி தேவஸ்தானமும், சர்வதேச ரோட்டரி சங்கமும் இணைந்து சென்னையில் உள்ள பல்வேறு காப்பகத்தை சேர்ந்த சிறப்பு குழந்தைகளை திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு குழந்தைகளை திருப்பதி வரை ரயிலில் அழைத்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது தமிழ்நாடு ரோட்டரி சங்கம்..
1,008 சிறப்பு குழந்தைகள்:
வீட்டில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும்பாடாக உள்ள காலத்தில், 1008 சிறப்பு குழந்தைகள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக திருப்பதி வரை அழைத்துச் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானமும், சர்வதேச ரோட்டரி சங்கமும் இணைந்து சென்னையில் உள்ள பல்வேறு காப்பகத்தை சேர்ந்த சிறப்பு குழந்தைகளை, தனியாக ஒரு சார்டர்ட் ரயில் புக் செய்து இங்கிருந்து ரேணிகுண்டா வரை அழைத்து சென்றனர். அங்கே திருப்பதி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஆரணி ஸ்ரீனிவாசலு, அவர்களை வரவேற்று கொடி அசைக்க 1008 சிறப்பு குழந்தைகள் பேருந்தில் திருமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
சிறப்பு ரயில்:
அங்கே கடுமையான கூட்டத்திலும் யாருக்கும் எந்த விதமாக பாதிப்பும் ஏற்படாமல், எப்படி இந்த பயணத்தை திட்டமிட்டோம், அது எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்று விவரிக்கிறார் சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் மஹாவீர் போத்ரா..
“எப்படி இதை சிறப்பாக நடத்தலாம் என்று சவால் எங்களுக்கு தொடக்கம் முதலே இருந்தது. முதலில் தேதியை முடிவு செய்தோம், அதன்பின் பேருந்தா இல்லை ரயிலா என்று யோசித்து, இறுதியில் ரயில் என்று முடிவு செய்தோம்.
அங்கேதான் முதல் சவால் காத்திருந்தது, நாங்கள் நினைத்தோம், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, ஆனால் ரயில்வே நிர்வாகம் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிவித்தனர். அதனால் தனியாக நாங்களே ஒரு சிறப்பு ரயிலை எங்களுக்கென்று பிரத்தியேகமாக எடுத்தோம். 20 ரயில் பெட்டிகள் 1500 பேர் பயணிக்க தேவைப்பட்டது.
குழந்தைகள் உற்சாகம்:
அடுத்ததாக சிறப்பு குழந்தைகள், காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தேர்ந்தெடுத்தோம். அடுத்ததாக சிறப்பு குழந்தைகள் என்பதால் அவர்களுடைய உடல் நிலையும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டோம், இரண்டு ஆம்புலன்ஸ் பயணம் செய்த பேருந்துக்கு முன்பும் பின்பும் பயணித்தன.
அனைவருக்கும் டி-ஷர்ட், கேப், வாட்டர் பாட்டில், சாப்பாடு என அனைத்தையும் தயார் செய்து ராஜ மரியாதையுடன் அழைத்து சென்றோம்.
இத்தனை செய்த பிறகும் எங்களுக்கு பெரிய சவால், அவர்களை குஷியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ரயில் முழுவதும் விளையாட்டுகளை நடத்தினோம், பல்வேறு நிகழ்வுகள் மூலம் அவர்களை உற்சாகமாக வைத்துக் கொண்டோம்”
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion