(Source: ECI/ABP News/ABP Majha)
IAS Officers Transfer: 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
IAS Officers Transfer: 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி கலையரசி சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரே மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மோனிகா ரானா மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற வாரிய செயல் இயக்குநராக சரவணனை அரசு நியமித்து உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி மோனிகா ரானா மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற வாரிய செயல் இயக்குநராக சரவணனை அரசு நியமித்து உள்ளது.
சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சிவக்குமார் ஐ.பி.எஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுஜித்குமார், மதுரை அமலாக்க பிரிவின் எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டார். சேலம் நகர துணை காவல் ஆணையராக இருந்த லாவண்யா, சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியின் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். மதுரை நகர (வடக்கு) துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்த், சிவகங்கை மாவட்ட காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஜி ஆர்.சுதாகர் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதேபோன்று, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் , சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார்.