மேலும் அறிய

நடிகர் விவேக் மறைவிற்கு ராணிப்பேட்டை எஸ்.பி. இரங்கற்பா

பிரபல நடிகர் விவேக்கின் மறைவிற்கு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தனது இரங்கலை இரங்கற்பாவாக வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், நேற்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது மறைவு தமிழ்த்திரை ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விவேக்கின் மறைவிற்கு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஐ.பி.எஸ். தன்னுடைய இரங்கலை இரங்கற்பாவாக வெியிட்டுள்ளார். அவர் விவேக் மறைவிற்கு எழுதிய கவிதையில்,

 


நடிகர் விவேக் மறைவிற்கு ராணிப்பேட்டை எஸ்.பி. இரங்கற்பா

“ பகுத்தறிவுக்கும்

நகைச்சுவைக்கும் பசையாக இருந்தவன்….

ஜாதி மத

சமூக கேடுகளுக்கு

பகையாக இருந்தவன்….

கண்டதை எல்லாம்

சொல்லி… எள்ளி….

சிரிக்க வைக்காமல்

கருத்தை சொல்லி

சிரிக்க வைத்தான்…

சிந்திக்க வைத்தான்…

கிண்டல் கேலி

செய்வதிலும் கூட-

பிறர்மனம் புண்படாமல்

எல்லை கருத்திட்ட

நகைச்சுவை நாயகன்.

பசுமை கலாம்

திட்டத்தினால்

வெப்பச்சுமை

குறைத்தவன்…

வெடிச்சிரிப்பை

உருவாக்கி

மனச்சுமையை குறைத்தவன்..

இலட்சோப லட்சம்

மரக்கன்று நட்டவனை-

இன்று – இலட்சியத்தோடு

சேர்த்துப் புதைக்கின்றது

இரக்கமில்லா இயற்கை..

எங்கள் கண்ணீர்

உமக்கும் –

உமது செடிகளுக்கும்

காணிக்கை ஆக்குகிறோம்…

விண்ணோடு விவேக்..

மண்ணோடு பசுமை..”

இவ்வாறு அவர் தனது இரங்கற்பாவில் அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
"திருமணமாகாமல் கர்ப்பம் - பீங்கானில் அமுக்கி கொன்றேன் " மருத்துவமனை கழிவறையில் கொடூரம்
CM Vijay: இடைத்தேர்தல் பரப்புரையை தொடங்கும் CM விஜய் - முதல் குறி பெருந்துறை, விராலிமலை - டார்கெட் மெஜாரிட்டி
இடைத்தேர்தல் பரப்புரையை தொடங்கும் CM விஜய் - முதல் குறி பெருந்துறை, விராலிமலை - டார்கெட் மெஜாரிட்டி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
Embed widget