மேலும் அறிய

Ramanathapuram Collector: ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்ட விவகாரம்; திமுக எம்.பி நவாஸ் கானின் உதவியாளர் கைது..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ramanathapuram Collector:  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் - எம்.பி. மோதல்:

பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை என்று கூறப்படுகிறது. தாமதம் ஆன காரணத்தால் விழாவை தொடங்குமாறு ராஜகண்ணப்பன் கூறியதாக கூறப்படுகிறது. விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நிகழ்ச்சிக்கு நவாஸ் கனி எம்.பி. வந்தார்.

தான் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் இதுதொடர்பாக நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அவர் அருகில் நின்ற அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் – நவாஸ் கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தள்ளிவிடப்பட்ட மாவட்ட ஆட்சியர்:

அமைச்சருடன் எம்.பி. நவாஸ்கனி வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் நவாஸ்கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நவாஸ் கனி ஆதரவாளர்களும் அமைச்சரின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவின்போது இருதரப்பினரையும் சமாதனப்படுத்த முயற்சித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளி விட்டனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அமைச்சர் மற்றும் எம்.பி.யின் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அமைச்சர் ராஜகண்ணப்பன் – நவாஸ் கனி வாக்குவாதத்தின்போது மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

கைது

அதைதொடர்ந்து நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்டதால் எம்.பி. நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget