Rain Update: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது...?
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
02.10.2022 மற்றும் 03.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/gGDvNasVaX
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 2, 2022
04.10.2022 முதல் 06.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 2, 2022
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தளி (கிருஷ்ணகிரி), ஒகேனக்கல் (தருமபுரி), ஓதர் (கிருஷ்ணகிரி), ராசிபுரம் (நாமக்கல்), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 2, சேந்தமங்கலம் (நாமக்கல்), புதுச்சத்திரம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), செய்யார் (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), காஞ்சிபுரம், பென்னாகரம் (தருமபுரி), பார்வூட் (நீலகிரி), பந்தலூர் (நீலகிரி) தலா 1.
02/10/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/L9FDQMs8DV
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 2, 2022
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
02.10.2022 முதல் 05.10.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை மேற்கு வங்கக்கடல் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.