Rain Update: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? முழு விவரம்..
தமிழ்நாட்டின் மேற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக.17) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 17, 2023
18.08.2023 முதல் 22.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை
17.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரை தென்மேற்குப் பருவமழை இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை எனும் நிலையில், இயல்பை விட 6 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: Madurai AIIMS: அப்பாடா.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான ஒப்பந்தம் கோரியது மத்திய அரசு..! செப்.18 வரை அனுமதி