மேலும் அறிய

Chennai Rains: கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு- முதல்வர் உறுதி

Chennai Stormwater Drain: சென்னை மாநகர மக்களுக்கும் புறநகர்ப் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்- முதல்வர் ஸ்டாலின்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

‘’மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டதாலேயே நீர் தேங்காமல் வடிந்துள்ளது. பணிகள் நல்ல முறையில் கைகொடுத்துள்ளன. 3 மாதங்களுக்கு முன்பே வட கிழக்குப் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டோம். இதற்கென ஆட்சிக்கு வந்தபோதே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு

படிப்படியாகப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் எல்லாப் பணிகளையும் முடிக்க முடியாது. மழைநீர் வடிகால் பணிகளில் 30 சதவீதம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அவையும் விரைவில் நிறைவு பெறும். சென்னை மாநகர மக்களுக்கும் புறநகர்ப் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கிண்டி ரேஸ் கிளப்பில் முதல்வர் ஆய்வு

முன்னதாக, கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 4 குளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை முதலமைச்சர் பார்வையிட்டு, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு
DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு
Chennai Rains: கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு- முதல்வர் உறுதி
Chennai Rains: கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு- முதல்வர் உறுதி
Free Food in Chennai: இயல்புக்கு திரும்பும் சென்னை.. 2 நாட்களுக்கு இலவச உணவு; எங்கே? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
இயல்புக்கு திரும்பும் சென்னை.. 2 நாட்களுக்கு இலவச உணவு; எங்கே? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking Tamil LIVE: புதுச்சேரி: 21-ஆம் தேதி ரேஷன் கடைகள் :2 கிலோ சர்க்கரை,10 கிலோ அரிசி தீபாவளி பரிசு

ABP Premium

வீடியோ

Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு
DA hike: தீபாவளி போனஸ் - மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட் - 3% அகவிலைப்படி உயர்வு
Chennai Rains: கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு- முதல்வர் உறுதி
Chennai Rains: கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு- முதல்வர் உறுதி
Free Food in Chennai: இயல்புக்கு திரும்பும் சென்னை.. 2 நாட்களுக்கு இலவச உணவு; எங்கே? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
இயல்புக்கு திரும்பும் சென்னை.. 2 நாட்களுக்கு இலவச உணவு; எங்கே? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking Tamil LIVE: புதுச்சேரி: 21-ஆம் தேதி ரேஷன் கடைகள் :2 கிலோ சர்க்கரை,10 கிலோ அரிசி தீபாவளி பரிசு
Breaking Tamil LIVE: புதுச்சேரி: 21-ஆம் தேதி ரேஷன் கடைகள் :2 கிலோ சர்க்கரை,10 கிலோ அரிசி தீபாவளி பரிசு
Para Commondos: கண்ணாடியை பற்களால் கடித்து உடைத்து மென்று விழுங்கும் இந்திய பாரா கமாண்டோக்கள் - காரணம் தெரியுமா?

Chennai Rains: 13 செ.மீ. மழைப்பொழிவு; முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பில்லை- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Chennai Rains: தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி; மீண்டும் கனமழை பெய்தாலும் தயார்நிலையில் அரசு- உதயநிதி பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி: என்ன தெரியுமா ?

Embed widget