மேலும் அறிய

புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த இடத்தில் தெரிஞ்சிகோங்க

புதிய நீதிமன்ற வளாகம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதிய நீதிமன்ற வளாகம் அருகே கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் 

புதிய நீதிமன்ற வளாகம் அருகே கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளர் நித்தியா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

புதுச்சேரி புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை)  முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சாலை பயணிகளின் நலன் கருதி, புதுச்சேரி, போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை) காலை முதல் அமல்படுத்தப்படுகின்றன.

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கடலூர் சாலையில் வரும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள், பேருந்துகள் உட்பட, மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்களும் மரப்பாலம் சந்திப்பைக் கடந்து முதலியார்பேட்டை நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்றவை முதலியார்பேட்டை விநாயக முருகன் டீக்கடை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.

மரப்பாலத்திலிருந்து வெங்கட சுப்பரெட்டியார் சிலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வழக்கமான கடலூர் சாலையை பின்பற்றி, ஏ.எஃப்.டி ரயில்வே கிராசிங் வரை சென்று, பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை வழியாக பயணிக்க வேண்டும். வெங்கட சுப்பைரெட்டியார் சிலை சந்திப்பில் இருந்து முதலியார்பேட்டை நோக்கி கடலூர் சாலையில் பயணிக்கும் பேருந்துகள், நடுத்தர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், புதிய நீதிமன்ற வளாகம் அருகே சிறிது வலதுபுறமாக திரும்பி, கடலூர் சாலையில் பிரிக்கப்பட்ட சாலை வழியாக பயணிக்க வேண்டும். 

நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக ஊழியர்கள் அனைவரும் நீதிமன்ற வாயில் எண். 1 வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்ற அனைத்து வழக்கு சம்மந்தப்பட்டவர்களும் பொதுமக்களும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் நீதிமன்ற வாயில் எண்.2 ஐ பயன்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே செல்லும்போது, நீதிமன்ற வாயில் எண்.2 வழியாக புதிய சிமென்ட் சாலையின் பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் வனத்துறைக்கு செல்லலாம். அவர்கள் வெளியே வரும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் சென்று வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையவேண்டும்.

எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து மேற்படி ரயில்வே மேம்பாலப் பணிகள் முடியும் வரை புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!
புதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி, பரிதவிக்கும் விவசாயிகள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget