சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்க இபிஎஸ் – பிரேமலதா தடலாடி
அரசியலில் நம்பிக்கைத்தான் முக்கியம். எடப்பாடி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும்

அதிமுக சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது அதிமுகவின் கடமை. இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது தான். பொறுத்தவரகள் பூமி ஆள்வார்கள்.
நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத் தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் அந்த நிலை உருவாகும். கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்க ஒன்று. அரசியலில் நம்பிக்கைத்தான் முக்கியம். எடப்பாடி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். இப்போது எங்களுடைய நேரம்.” எனத் தெரிவித்துள்ளார்.





















