மேலும் அறிய

Kodanad Estate Case: பங்களா சாவி யாரிடம் இருக்கும்? விசாரணைக்கு கோடநாடு வருவீர்களா? சசிகலாவிடம் சரமாரி கேள்விகள்!

கோடநாடு பங்களாவிற்கு விசாரணைக்கு அழைத்தால் வருவீர்களா ? என்ற கேள்விக்கு நிச்சயம் வருவேன் என சசிகலா பதில் அளித்துள்ளார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. கொலை, கொள்ளை தொடர்பாக பல கேள்விகள் சசிகலாவிடம் சரமாரியாக கேட்கப்பட்டதாக தகவல். குறிப்பாக, பங்களாவின் சாவி யாரிடம் இருக்கும் ? சம்பவத்தின்போது பணியில் இருந்தவர்கள் யார் யார் ? கனராஜ் போயஸ் தோட்டத்தில் பணியாற்றினாரா ? சம்பவத்திற்கு பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா ? கோடநாடு பங்களாவில் இருந்த ஊழியர்கள் / காவலர்கள் எத்தனை பேர்?அவர்களையெல்லாம் பணிக்கு அமர்த்தியது யார் ? பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன? உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 

கோடநாடு பங்களாவிற்கு விசாரணைக்கு அழைத்தால் வருவீர்களா ? என்ற கேள்விக்கு நிச்சயம் வருவேன் என சசிகலா பதில் அளித்துள்ளார். மேலும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான் எந்தவிதமான விசாரணையை எதிர்கொள்ளவும் தயார் என சசிகலா விசாரணையில் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் இருக்கும் சசிகலாவின் இல்லத்தில் இன்று காலை விசாரணையைத் தொடங்கியது தனிப்படை. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. கொடநாட்டில் ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்ற வகையிலும், அங்கு என்னென்ன பொருள்கள், ஆவணங்கள் இருந்தது என்பதை அறிந்தவர் என்ற வகையிலும் சசிகலாவிடம் நடந்தப்படும் இந்த விசாரணை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஐஜி சுதாகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ.வுமான  விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு விவகாரத்தில் சசிகலாவின் விசாரணை முக்கிய திருப்பங்களை ஏற்படத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kodanad Estate Case: பங்களா சாவி யாரிடம் இருக்கும்? விசாரணைக்கு கோடநாடு வருவீர்களா? சசிகலாவிடம் சரமாரி கேள்விகள்! 

நடந்தது என்ன?

கோடநாடு வழக்கில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது சில கைக் கடிகாரங்களும் குரங்கும் பொம்மையும்தான் என போலீசார் தெரிவித்த நிலையில், உண்மையில் கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், முதலில் விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். 

கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தார் என்பதால், அந்த நேரத்தில் அவரை சிறையில் சென்று பார்த்தவர்களில் விவேக் ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்களாவோடு தொடர்புடையவர்கள் என்பதால், முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate 9th April: பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும் - கே.பி.ராமலிங்கம்
கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும் - கே.பி.ராமலிங்கம்
சென்னைக்கே டஃப்..! இனி எல்லாமே பூந்தமல்லி தான்..! ஒவ்வொரு திட்டமும் பயங்கரமா இருக்கே..
சென்னைக்கே டஃப்..! இனி எல்லாமே பூந்தமல்லி தான்..! ஒவ்வொரு திட்டமும் பயங்கரமா இருக்கே..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJPNTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026Seeman meets Nirmala Sitharaman:  நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?Sengottaiyan vs EPS:  செங்கோட்டையன் தனி ரூட்! நிர்மலா பக்கா ஸ்கெட்ச்! மரண பீதியில் எடப்பாடி? | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate 9th April: பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும் - கே.பி.ராமலிங்கம்
கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும் - கே.பி.ராமலிங்கம்
சென்னைக்கே டஃப்..! இனி எல்லாமே பூந்தமல்லி தான்..! ஒவ்வொரு திட்டமும் பயங்கரமா இருக்கே..
சென்னைக்கே டஃப்..! இனி எல்லாமே பூந்தமல்லி தான்..! ஒவ்வொரு திட்டமும் பயங்கரமா இருக்கே..
பவன் கல்யாண் :  பேசுவது சனாதன தர்மம்...ஆனால் மகனுக்கு மார்க் என்று பெயரா...? இதான் பின்னணி
பவன் கல்யாண் : பேசுவது சனாதன தர்மம்...ஆனால் மகனுக்கு மார்க் என்று பெயரா...? இதான் பின்னணி
Rajinikanth: “ஜெயலலிதாவை எதிர்த்ததற்கு இதுவும் முக்கிய காரணம்“.. RMV ஆவணப்படத்தில் ரஜினி பேசியது என்ன.?
“ஜெயலலிதாவை எதிர்த்ததற்கு இதுவும் முக்கிய காரணம்“.. RMV ஆவணப்படத்தில் ரஜினி பேசியது என்ன.?
Mahavir Jayanti 2025 Wishes: மகவீர் ஜெயந்தியை இப்படி கொண்டாடுங்கள்: வாழ்த்துகள், புகைப்படங்கள் இங்கே!
Mahavir Jayanti 2025 Wishes: மகவீர் ஜெயந்தியை இப்படி கொண்டாடுங்கள்: வாழ்த்துகள், புகைப்படங்கள் இங்கே!
குட் பேட் அக்லி முதல் விமர்சனம் வெளியானது.. சம்பவத்தை பார்த்து மிரண்டுபோன சென்சார் அதிகாரிகள்
குட் பேட் அக்லி முதல் விமர்சனம் வெளியானது.. சம்பவத்தை பார்த்து மிரண்டுபோன சென்சார் அதிகாரிகள்
Embed widget