மேலும் அறிய

PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்

நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் மிக கடுமையான பாதிப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் கிடைப்பதில் மிகவும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் ஏராளமான சிரமங்கள் ஏற்பட்டு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.

பெட்ரோல், டீசலை குறைவாக பயன்படுத்துங்கள்:

இந்த சூழலில், பிரதமர் மோடி ஹைதரபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார். அந்த கூட்டத்ததில் அவர் பேசியதாவது, இந்தியாவின் அண்டைப் பகுதிகளில் போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இதனால் மெட்ரோ வசதியுள்ள பகுதிகளுக்கு முடிந்தவரை மெட்ரோவில் பயணியுங்கள். 

கார் செல்லும்போது பலரும் சேர்ந்து செல்லும் முறையை பின்பற்றுங்கள். பொருட்களை கொண்டு செல்வதற்கு ரயிலைப் பயன்படுத்துங்கள். இந்த செயல்பாடுகள் பெட்ரோல், டீசல் செயல்பாட்டை குறைக்கும். இதன்மூலம் நாம் அந்நியச் செலவாணியைச் சார்ந்து இருப்பதை குறைக்கும். 

தங்கம் வாங்க வேண்டாம்:

வெளிநாட்டுப் பயணங்களை ஒரு வருடத்திற்கு ஒத்திவையுங்கள் அதேபோல, விழாக் காலங்களில் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம். சமையல் எண்ணெய் பயன்படுத்துவதை 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள்.  

நீங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் பட்டியலைத் தயாரித்து அதில் எவையெல்லாம் வெளிநாட்டுப் பொருட்கள் என்ற பட்டியலைத் தயாரியுங்கள். இதற்கு வெளிநாட்டுப் பொருட்களைத் தூக்கி வீச வேண்டும் என்று அர்த்தம் அல்ல.  ஆனால், தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அர்த்தம் இது. விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்பாட்டையும் குறைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தே பணிபுரிவதும் உகந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் அதிர்ச்சி:

பிரதமர் மோடியின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அமெரிக்கா - ஈரான் போர் நிற்காமல் நடந்து வருவதும், இரு நாட்டு தலைவர்களும் முரண்பட்ட கருத்துக்களால் மோதி வருவதும் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் நீரிணை போக்குவரத்தையே பாதிக்கிறது.

ஹார்மூஸ் நீரிணை:

இந்தியாவிற்கு தங்கம், கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு முக்கியமான பொருட்களும் கப்பல் வாயிலாக ஹார்மூஸ் நீரிணை வழியாகவே வருகிறது. இதனால், இந்த பொருட்களின் இறக்குமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வணிக சிலிண்டர் எண்ணெய் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 1000 ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், இன்னும் சில தினங்களில் வீட்டு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விலை உயருமா?

இந்த சூழலிலே பிரதமர் மோடி பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துமாறும், எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், நாட்டின் கையிருப்பில் எவ்வளவு பெட்ரோல், டீசல் உள்ளது? என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் வெதர் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் வெதர் அலர்ட்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
நடுவழியில் பரபரப்பு! அதிரடிப்படை வாகனத்தில் உதயநிதி: தடுத்து நிறுத்திய போலீஸ், ஒலக்கூர் காவல் நிலையத்தில் நடந்து என்ன?
நடுவழியில் பரபரப்பு! அதிரடிப்படை வாகனத்தில் உதயநிதி: தடுத்து நிறுத்திய போலீஸ், ஒலக்கூர் காவல் நிலையத்தில் நடந்து என்ன?
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget