மேலும் அறிய

கள்ள உறவு - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? - பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர கூலித் தொழிலாளி

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட 65 வயது பெண் , கள்ள த்தொடர்பு காரணமாக கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டுமான பணியில் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில் கடந்த 21 - ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.

இது குறித்து நில உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பல நாட்களாக உயிரிழந்திருந்ததால் உடல் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்தவர் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியைச் சேர்ந்த 65 வயதான வளர்மதி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி விஜயகுமார் என்பவரே கொலையாளி என்பது உறுதியானது.

" நீ எல்லாம் ஒரு ஆம்பளையா "

விசாரணையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் காஞ்சிகோவில் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. சம்பவத்தன்று விஜயகுமார் மதுபானம் வாங்கிக் கொண்டு வளர்மதியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதிகளவில் மது அருந்தியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், " நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? " என்று வளர்மதி அவமதித்து பேசியதாகவும் , இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், வீட்டிற்கு சிலிண்டர் வாங்குவதற்காக விஜயகுமாரிடம் வளர்மதி ரூ.5,000 கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும் தகராறு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த விஜயகுமார், தன்னிடம் இருந்த கத்தியால் வளர்மதியின் கழுத்தை சரமாரியாக அறுத்து படுகொலை செய்து விட்டு, அவரது உடலை அங்கேயே வீசி விட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், உயிரிழந்த பெண் அணிந்திருந்த காதுத் தோட்டை பறித்து சென்று அடமானம் வைத்து ரூ.22 ஆயிரம் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்த காஞ்சிகோவில் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget