மேலும் அறிய

Rajiv Case Timeline: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை என்ன? முழு விவரம் உள்ளே...!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 32 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் முதன்முறையாக ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை கீழே காணலாம்.

1991 மே 21 :

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார்.

1991 ஜூன் 11 :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

1991 ஜூன் 14 :

இந்த வழக்கில் நளினி, அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் கைது செய்யப்பட்டனர்.

1991 ஜூலை 22 :

மற்றொரு நபராக சுதேந்திரராஜா என்ற சாந்தனு கைது செய்யப்பட்டார்.

1998 ஜன 28:

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது.

1999 மே 11 :

சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 19 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்ததாக கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

1999 அக் 8:

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று நான்கு பேரும் அனுப்பிய மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1999 அக் 10:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர்.

1999 அக் 29:

அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி இவர்கள் நால்வரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவ 25:

உயர்நீதிமன்றம் ஆளுநரின் முடிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியதுடன் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

2000 ஏப் 19:

நால்வரின் தூக்கு தண்டனை குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

2000 ஏப் 24:

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

2000 ஏப் 26:

நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

2006 செப் 14:

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனுக்கு விடுதலை கிடைக்காததால், நளினி நீதிமன்றம் சென்றார்.

2000 – 2007:

மேற்கண்ட காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக பொறுப்பு வகித்த கே.ஆர்.நாரயணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரிடம் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தது.

2008 செப் 24:

நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2008 மார்ச் 19:

ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.

2011 ஆக 12:

தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தனு, பேரறிவாளன் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். அந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் பரவியது.

2011 ஆக :

11 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால், தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும், இதனால் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மூன்று பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப் 18:

நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பல ஆண்டுகள் எந்த காரணமுமின்றி மூன்று பேரின் கருணை மனுவும் நிலுவையில் இருந்ததால் அவர்களது மரண தண்டனையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

2014 பிப் 19:

தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மத்திய புலனாய்வுத்துறை விசாரித்திருப்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தார். மூன்று நாட்களில் சிறையில் உள்ள 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

2014 பிப் :

தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க மத்திய அரசு தடையாணை பெற்றது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் விடுவிக்க முடியாது என மத்திய அரசு வாதம்.

2014 ஏப் 25:

இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

2015 டிசம் 2 :

சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதேசமயம், 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது.

2016 பிப் 24:

தந்தை மரணம் காரணமாக முதன்முறையாக நளினி பரோலில் வந்தார்.

2016 மார் 2;

7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2017 ஆக 24:

சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பரோல் வழங்கியது.

2018 செப் 6 :

7 பேர் விடுதலை தொடர்பாக 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது.

2018 செப் 9:

சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தது.

2018 செப் 9:

அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேரில் சந்தித்தார்.

2019 ஜூலை 1 :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கோரி ஆளுநருக்றகு நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

2020 ஜன 14:

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி.

2020 ஜன 21:

குற்றவாளிகள் கருணை மனு மீது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்க உத்தரவு

2020 நவ 23 :

பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு

2022 பிப் 11:

சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

2022 மார்ச் 9:

32 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget