மேலும் அறிய

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  

1991 மே 21:  சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி வந்தார். அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

1991 ஜூன் 11:  பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 

1991 ஜூன் 14: நளினி கைது செய்யப்பட்டார்.  

1991 ஜூலை 22: சுதேந்திரராஜா என்ற சாந்தன் கைது செய்யப்பட்டார். 

1998 ஜனவரி 28: வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. 

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

1999 மே 11: நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட, தூக்குத் தண்டனையை மட்டும் உறுதிப்படுத்தியது. இதில், 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். அதே போல,  ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1999 அக்டோபர் 8:  சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வரும், தங்களது தூக்குத் தண்டனையாக ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி நால்வரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செயதது. 

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

1999 அக்டோபர் 10:  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 

1999 அக்டோபர் 29: ஆளுநர் பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர். 

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் அமைச்சரவை மீதே ஆளுநர் முடிவெடிக்க வேண்டுமெனக் கூறியது.

2000 ஏப்ரல் 19:  இந்த விவகாரம் குறித்து, மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில்  நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. 

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசு தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

2000 முதல் 2007 ஆம் ஆண்டுகளின் கால இடைவெளியில் குடியரசுதலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் அனுப்பப்பட்ட கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். 

2006 செப்டம்பர் 14: 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனை கைதிகளாக விடிவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருப்பினும், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இதில் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார். 

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து மேல் முறையீட்டிலான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

2007: பிரதீபா பாட்டீல் குடியரசு தலைவராக இருந்த காலக்கட்டத்திலும் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. 

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

2008 மார்ச் 19: ராஜூவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி , நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். 

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து செப்டம்பர் மாதம் அவர்கள் தூக்கில் போடப்படலாம் என செய்திகள் வெளியாகின.

2011 ஆகஸ்ட் 26 :  11 ஆண்டுகளாக சிறையில் இருந்து துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், அதனால் தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி, மூவரும் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற  நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 

2014 பிப்ரவரி 18: கருணை மனுக்கள் எந்த காரணமுமின்றி நிலுவையில் இருந்த காரணத்தால், நால்வரின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

2014 பிப்ரவரி 19: அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் படி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார். 

2014 பிப்ரவரி : தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியது. தொடர்ந்து 7  பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிக்க தடையும் பெறப்பட்டது. 

2014 ஏப்ரல் 25:  வழக்கில்  மத்திய மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

2015 டிசம்பர் 2:   மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

ஆனால், சட்டப்பிரிவு 161வது கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென தெரிவித்து, இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6 : 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 செப்டம்பர் 9  : ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரைந்தது. 

2019 ஜூலை 1 : ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி பரிந்துரைத்ததை ஆளுநருக்கு நினைவூட்ட நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

2019 மே 9:  7 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஆளுநர் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

2020 ஜனவரி 14: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டம் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 

2020 ஜனவரி 21 : குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெரிவிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநர் இந்த வாரத்தில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்தது. 

பிப். 2 2020 : கூட்டத்தொடரில் தொடக்க உரை ஆற்றிய ஆளுநர் உரையில் ஏழு பேர் குறித்து எந்தவித அறிவிப்பு வெளியாகவில்லை.

2021 மே 28:

சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக வருக்கு பரோல் வழங்க் அவரது தாய் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது. தொடர் சிகிச்சை காரணமாக, அவருக்கு 8 முறை பரோல் வழங்கப்பட்டது.   

ஜனவரி 20 ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

2022 பிப்ரவரி:  10 வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. 

2022 மார்ச் 9: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget