மேலும் அறிய
Advertisement
ஆடு மேய்க்கும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நீலமேகத்துடன் ஒரு ஜாலி டாக்...!
தேர்தல் விளம்பரம் எழுதுவதற்காக சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்தித்து, 'நீங்கள் தான் வேட்பாளர் 'என கூறிய போது கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் அவராலும் நம்பமுடியவில்லை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. இந்த தொகுதியில் தமாகா சார்பில் எம்எல்ஏவாக இருந்த எஸ்.எஸ்.மணிநாடார் மறைவையொட்டி நடந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை ஜெயலலிதா அறிவிக்கப்போகிறார் என பலரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளராக இருந்த நீலமேகவர்ணத்தை வேட்பாளராக அறிவித்தார்.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எல்.நீலமேகவர்ணம் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இந்த இடைத்தேர்தலில் முக்கிய எதிர்கட்சியான திமுக போட்டியிடாமல் புறக்கணித்தது காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியில் 9 நாட்கள் முகாமிட்டு கிராமம், கிராமமாக பிரசாரம் செய்தார். சாதாரண தொண்டனையும் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெறச் செய்து காட்டுவேன் என ஜெயலலிதா பேசினார்.
வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட போது, நீலமேகவர்ணம் சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சி என்ற கிராமத்தில் தேர்தல் விளம்பரம் எழுதுவதற்காக சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்தித்து, 'நீங்கள் தான் வேட்பாளர் 'என கூறிய போது கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் அவராலும் நம்பமுடியவில்லை. இடைத் தேர்தலில் நீலமேகவர்ணம் 17,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த நிலையில், பிறகு கட்சியில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. படிப்படியாக அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் தற்போது தனது சொந்த ஊரான படுக்கப்பத்து கிராமத்தில் அரசியலுக்கு முன் தான் செய்து வந்த தொழிலான ஆடுமேய்க்கும் தொழிலுக்கே திரும்பியுள்ளார். மேலும் பனை, முருங்கை, புளியமரங்களை வளர்த்தும் பராமரித்தும் வருகிறார்.
முன்னாள் எம்எல்ஏ ஒருவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருவது சாத்தான்குளம் பகுதியில் வியப்பாக பேசப்படுகிறது. சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்திற்கு சென்றோம், தென்ன ஓலை கிடுகில் அமைக்கப்பட்டுள்ள சின்ன கூரைக்கு கீழ் பனை நார் கட்டிலில் உட்கார்ந்திருந்த அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ஐயா வாங்கன்னு வாய் நிறைய வரவேற்ற அவர், பதனி குடிங்கன்னு சொல்லி பனைல இருந்து இப்போ தான் இறக்கினதுன்னு சுண்ணாம்பு பூசின குடுவைல இருந்த பதனீரை நம்மிடம் தந்தார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக உண்மை தொண்டனாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2003ஆம் ஆண்டு இடைத்தேர்தல் விளம்பரத்துக்காக சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த போது அதிமுக வேட்பாளராக என்னை ஜெயலலிதா அறிவித்த தகவல் வெளியானது. ஜெயலலிதாவே எனக்காக 9 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார். அதனால் நான் வெற்றி பெற்றேன். முதன் முதலில் சட்டப்பேரவைக்கு சென்ற போது பேருந்தில் சென்றதை அறிந்து ஜெயலலிதாவே எனக்கு கார் வாங்கித் தந்தார்.
இப்போதும் உண்மையான அதிமுக தொண்டனாகவே இருக்கிறேன். தற்போது நான் முன்பு பார்த்து வந்த ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை செய்து வருவதுடன் பனை, புளியமரம், முருங்கை வளர்த்து பராமரித்து வருகிறேன். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது என்றார்.
தற்போது சாத்தான்குளம் சட்டப்பேரவை தொகுதியே இல்லை. தொகுதி மறுவரையின் போது இந்த தொகுதி நீக்கப்பட்டு, இந்த தொகுதியில் இருந்த பகுதிகள் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion