பரமக்குடி மக்களின் நீண்ட நாள் கனவு... வரப்போகுது புதிய சாலை.. - இனி அரை மணி நேரத்தில் ராமநாதபுரம் ரீச் ஆகலாம்
மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி நெடுஞ்சாலையின் முக்கியமான பகுதியான, பரமக்குடி - ராமநாதபுரம் நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக விரிவாக்க திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது

பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 46.7 கீமி தூரத்துக்கான நான்கு வழி சாலைத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
4 வழிச்சாலை திட்டம்
மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி நெடுஞ்சாலையின் முக்கியமான பகுதியான, பரமக்குடி - ராமநாதபுரம் நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதறகான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
மதுரை தனுஷ்கோடி திட்டம்:
தமிழகத்தின் மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் முக்கிய பகுதியாக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை உள்ள சுமார் 46.7 கிலோமீட்டர் தூரம், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.1,853 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுய். 'ஹைப்ரிட் அன்னுயிட்டி முறை' (Hybrid Annuity Mode) எனப்படும் நவீன முறையில் இந்த வேலைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
வானங்களின் வேகம் அதிகரிக்கும்:
தற்போது இந்த பாதையில் செல்லும் வாகனங்களின் சராசரி வேகம் 48 கிமீ மட்டுமே உள்ளது. ஆனால் திட்டம் நிறைவு பெற்ற பிறகு 80 கிலோமீட்டராக அதிகரிக்கவுள்ளது. இதனால் பயண நேரம் சுமார் 40% குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்ல 60 நிமிடங்கள் ஆகிறது, இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், இனி வெறும் 35 நிமிடங்களில் ராமநாதபுரத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிவு பெறுமா தனுஷ்கோடி:
இந்த திட்டத்தால் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் போக்குவரத்து வசதி விரைவுபடும். மேலும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளுக்கான சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும்.
இது மட்டுமல்லாமல், சரக்கு மற்றும் வணிக போக்குவரத்தையும் அதிகரிக்கும். தனுஷ்கோடி வரையிலான சாலையும் முழுவதும் விரைவில் மேம்படுத்தப்படும் என்றும், தற்போது பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் விரைவாக நடைபெறுவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி வரையிலான சாலை பணிகள் முடிவடைந்தால் தனுஷ்கோடிக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து பொருளாதார அளவிலும் தனுஷ்கோடி பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் போக்குவரத்து சுமை குறைவதோடு, பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் என்பவை பெரிதும் அதிகரிக்கும் என தெரிகிறது.





















