மேலும் அறிய

மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: 
 
சுமார் 3.1  கிமீ  முதல் 4.5  கிமீ உயரம் வரை கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
 
தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா -  கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும்,  மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.
 

 
05-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,  தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
 
06-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்,  நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
 
07-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 
08-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
 
 09-06-2026 மற்றும்  10-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கோயம்புத்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும்.
 
11-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

 
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:  
 
05-06-2026: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
 
 06-06-2026 முதல் 09-06-2026 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். 
 

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:  

 
05-06-2026: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.  
 
06-06-2026 முதல் 09-06-2026 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும். 
 
05-06-2026: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 

 
இன்று (05-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 -31° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 
நாளை (06-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகள்:
 
05-06-2026 முதல் 09-06-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
வங்கக்கடல் பகுதிகள்: 
 
05-06-2026 முதல் 09-06-2026 வரை: தெற்கு வங்கக்கடல் மற்றும்   அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
அரபிக்கடல் பகுதிகள்: 
 
05-06-2026 முதல் 07-06-2026 வரை: கேரள-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
08-06-2026: மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
09-06-2026:  மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முருக பக்தர்களையோ, கார்த்திகை தீபத்தையோ நாங்கள் எதிர்க்கவில்லை - திருமாவளவன்!
முருக பக்தர்களையோ, கார்த்திகை தீபத்தையோ நாங்கள் எதிர்க்கவில்லை - திருமாவளவன்!
திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை முழுவதும் 144 தடை! உச்ச நீதிமன்ற உத்தரவு என்னாகும்?
திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை முழுவதும் 144 தடை! உச்ச நீதிமன்ற உத்தரவு என்னாகும்?
"என் பிள்ளைகளே என்னை அடிக்கிறார்கள்" - பெற்ற தாய் கண்ணீர் வாக்குமூலம்... ஆட்சியரிடம் கதறல்!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! சிறுதானிய சாகுபடிக்கு ரூ.8,000 வரை மானியம் - வேளாண்மைத் துறை அறிவிப்பு!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! சிறுதானிய சாகுபடிக்கு ரூ.8,000 வரை மானியம் - வேளாண்மைத் துறை அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget