மேலும் அறிய

2026 புத்தாண்டு ராசிபலன் - சிம்ம ராசி

இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் பொற்காலமே..

அன்பார்ந்த வாசகர்களே 2025ல் வேலை நிமித்தமாக போராட்டம் அல்லது வேலை மாற்றம் ஒருபுறம்... மற்றொருபுறம் திடீர் பயணங்களால் அலைச்சல்... பண இழப்பு போன்ற கலவையான பலன்களையும் சந்தித்து இருப்பீர்கள்.. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு எப்படி? இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.. 

 குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் பாவத்தில் அமர்ந்து. முதல் ஆறு மாதத்திற்கு லாபத்தின் குருவாக செயல்பட போகிறார். அப்படி என்றால் 5 மற்றும் 8ம் வீட்டு அதிபதி, 11ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் உங்கள் சிந்தனைகள் செயல் வடிவமாக மாறும்.  திட்டம் போட்டு பல நாட்களாக வைத்திருந்த சில காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். அதன் மூலம் லாபமும் உண்டு... குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். 

 பூர்வீகத்தில் எங்களுடைய நிலம், இடம், வீடு இருக்கிறது.. அதை பராமரிக்க முடியவில்லை, விற்க முடியவில்லை என்று யோசிக்கும் அன்பர்களுக்கு கூட.. இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் பொற்காலமே.. அது தொடர்பான நல்ல தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும்... 11 ஆம் வீட்டில் அமரும் குரு பகவான் 5ம் வீட்டை பார்ப்பதால்.. குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கி தவிக்கும் சிம்மராசி அன்பர்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வாய்ப்பு உண்டு... தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் குரு தக்ஷிணாமூர்த்தியை சென்று வழிபடுங்கள்....

 போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்... எவ்வளவு பெரிய கடினமான போட்டியாக இருந்தாலும் கூட உங்களால் சுலபமாக அதில் வெற்றி பெற முடியும். குரு பகவான் 11 ஆம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பாவத்தை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு புகழ் அங்கீகாரம் போன்றவை வந்து சேரும்.. அடுத்ததாக சனி பகவானின் 8ம் வீட்டு சஞ்சாரத்தை பற்றி பார்க்கலாம்...

 சனி பகவான் அமர்ந்திருக்கும் பாவத்தை எவ்வளவு கேட்டாலும் பொறுமையாக தான் கொடுப்பார்.... அப்படி வேகமாக வேண்டுமென்றால் மூத்தவர்களால் மட்டுமே முடியும்.. அதாவது வீட்டில் உள்ள பெரியவர்களை வைத்து பேசி அதன் மூலம் தீர்வு காண்பதன் மூலம் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டு ஏதாவது ஒரு கடன் பிரச்சனையோ அல்லது எதிரிகளின் தொல்லையோ நோயின் மூலம் ஏற்படும் தாக்கமோ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின்.... 

 வயோதிகர்களால் மட்டுமே நல்லவைகளை உங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்... ராகு பகவான் 7ல் அமர்ந்திருக்கிறார் தோஷமா? என்றால்? இல்லை... தற்காலிகமாக ராகு பகவான் 7ல் அமர்ந்திருப்பது உங்களுக்கு வீட்டு வாழ்க்கைத் துணை உடன் சில சண்டை சச்சரவுகளை கொண்டு வரும் என்பது உண்மை... ஆனால் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சினையாக கொண்டு வருமா என்றால் இல்லை.

 சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார் என்றால் பிரச்சனை உங்களிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்... நீங்கள் செய்யும் ஏதோ ஒரு செயலோ அல்லது உங்களுடைய வாழ்க்கைத் துணை சிறியதாக ஏதோ ஒன்று சொல்லிவிட்டால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதோ உங்களின் பக்கம் தான் பெரிதாக செயல்படுமே தவிர வாழ்க்கைத் துணையின் பக்கம் இருக்காது... ஆகவே நிச்சயமாக நீங்கள் நாவடக்கத்தோடு செயல்படுங்கள்... பொறுமை மிக அவசியம்.... ஒன்று மற்றும் ஏழாம் பாவகங்களில் ராகு கேது அமரும்போது பிரச்சனை பெரிதாகி பிரிவுகளை ஏற்படுத்தும்... வாழ்க்கைத் துணையை விட்டோ அல்லது விரும்பி அவர்களை விட்டு பிரிந்தால் போதும் என்ற மனநிலைக்கு சிம்மராசி அன்பர்கள் ஆட்பட்டு விடுவார்கள்.... அதற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டாம்...

 கேது பகவான் ராசியிலேயே அமர்ந்திருக்கிறார்... எந்த காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் மிக பொறுமையாக அதில் உள்ள நல்லவைகளை ஆராய்ந்து தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.... ஆனால் சற்று அதிரடியாக நீங்கள் செய்ய வாய்ப்புண்டு.... அந்த அதிரடியே உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வரலாம்... மற்றவர்கள் சிந்திப்பதற்கு முன்பாகவே நீங்கள் சிந்தித்து விடுவீர்கள் அதை செயலாகத்திற்கு கொண்டு வரும்போது சில சிக்கல்கள் ஏற்படும்.... எப்படி என்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு போக வேண்டாம் அப்படி போனால் ஆபத்து என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் குடும்பத்தார் இடத்திலோ நீங்கள் பேசியிருப்பீர்கள்.... அப்படி பேசும் சமயத்தில் அவர்களுக்கு அது பற்றின ஞானம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் நிச்சயமாக நீங்கள் பொறுமையாக எடுத்துச் சொன்னால் அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்... அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சண்டை போட வேண்டாம்....

 லட்சுமி நரசிம்மரை சென்று வாரம் தோறும் தரிசித்து வாருங்கள்... உங்களின் வேகம் கட்டுப்படும்... குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது... பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்... வாழ்த்துக்கள் வணக்கம்!!!

தலைப்பு செய்திகள்

Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
திடீர் மாற்றம்... உப்பு தன்மையுடன் தண்ணீர்: சாகுபடி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கண்ணீர்
திடீர் மாற்றம்... உப்பு தன்மையுடன் தண்ணீர்: சாகுபடி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கண்ணீர்
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
போர்க்களம் போல் மாறிய தஞ்சை... திமுக-தவெக மத்தியில் தள்ளுமுள்ளு, செருப்பு, கற்கள் வீச்சு: முதல்வர் விஜய் கொடும்பாவி எரிப்பு
போர்க்களம் போல் மாறிய தஞ்சை... திமுக-தவெக மத்தியில் தள்ளுமுள்ளு, செருப்பு, கற்கள் வீச்சு: முதல்வர் விஜய் கொடும்பாவி எரிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget