CM Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்; ஆளுநர் வெறும் தபால்காரர்தான்- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும் ஆளுநர் வெறும் தபால் காரர்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும் ஆளுநர் வெறும் தபால் காரர்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா நகரில் நடைபெற்று வரும் திருமண விழாவொன்றில் கலந்துகொண்டு முதல்வர் பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
’’திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை திமுக ஓயாது.
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால் காரர்தான். நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளது’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.