Seeman Senthamizhan | தந்தையின் உடலை பார்த்து கதறியழுத சீமான்..
உடல்நலக்குறைவால் காலமான, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழனின் உடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது
![Seeman Senthamizhan | தந்தையின் உடலை பார்த்து கதறியழுத சீமான்.. nam tamizhar party leader seeman crying for his father deadbody Seeman Senthamizhan | தந்தையின் உடலை பார்த்து கதறியழுத சீமான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/13/107e94e6ada6219e6fce4c08d3a9b1a0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிப்பவர் சீமான். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது தந்தை செந்தமிழன், சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் வசித்து வந்தார். 80 வயதான அவர் இன்று உடல்நலக்குறைவு மற்றும் வயதுமூப்பு காரணமாக காலமானார். செந்தமிழனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்த சீமான் தந்தை மறைவு செய்தி கேட்டு உடனடியாக அரணையூர் விரைந்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தனது தந்தையான செந்தமிழனின் உடலை கண்டதும், சீமான் வேதனை தாங்க முடியாமல் கதறி அழுதார். இதையடுத்து, அவரது தந்தை உடல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)