மேலும் அறிய

Mylswamy Annadurai Birthday: 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

வீட்டில் நம் அனைவரையும் போல நிலாச்சோறு உண்டு வளர்ந்த மயில்சாமி அண்ணாதுரை நிலாவிற்கே செயற்கைகோள் விட்டு நிலவு மனிதன் ஆனது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இதோ...

நீங்கள் பள்ளி மாணவனாக பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் ஜோதிடர் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து பெற்றோர் முன்னிலையில் உங்கள் ஜாதகத்தில் இனி மேல் படிப்பு படிக்கும் யோகம் இல்லை என்று சொல்லி இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அந்த தேர்வை எப்படிப்பட்ட மனநிலையுடன் எழுத சென்றிருப்பீர்கள்? என்று நினைத்து பார்க்க முடிகிறதா?

இதே போன்றதொரு பிரச்னையையை தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் சமயத்தில் எதிர்கொண்ட மாணவர் ஒருவர், ஜோதிடரின் கணிப்பை தவிடுபொடியாக்கி அம்மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். அதுமட்டுமில்லாமல் பிற்காலத்தில் அம்மாணவர் ஜோதிட சாஸ்திரத்தில் வரும் கிரகங்களான சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் கூட விண்கலம் அனுப்பும் அளவிற்கு சாதனை படைப்பான் என்பதை அந்த ஜோதிடர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அப்படிப்பட்ட சாதனை மனிதர்தான் மயில்சாமி அண்ணாதுரை. 

Mylswamy Annadurai Birthday: 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தினமாகும். அன்றைய தினம்தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது மங்கள்யான் விண்கலம். இந்த சாதனையை நிகழ்த்த 19 முறை முயற்சி செய்திருந்தது அமெரிக்கா, 16 முறை முயற்சி செய்திருந்தது ரஷ்யா, முதல்  முயற்சியில் தோற்றிருந்தது ஜப்பான், ஆனால் முதல் முயற்சியிலேயெ செவ்வாய்க்கு செயற்கை கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த சாதனையை வெறும் 450 கோடியிலே இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது. இதனால் செவ்வாய் கிரகத்தை ஆராயும் முதல் ஆசிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த சாதனைக்கு மங்கள்யானின் திட்டக்குழு இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் வழிநடத்துதல் மிக முக்கியமாக இருந்தது.

Mylswamy Annadurai Birthday: 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

1958-ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் நடுத்தர ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் முதலாம் வகுப்பு பள்ளிப்படிப்பு மாட்டுக் கொட்டகையில் தொடங்கி மங்கள்யானில் நிறைவடைந்தது. தனது தந்தையை போலவே ஆசிரியாராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் ஏற்பட்ட காதல் அவரை பொறியியல்  கல்லூரியை நோக்கி அழைத்துச் சென்றது. கோவை அரசு பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் முடித்தவர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்தார். 

தான் பிறந்த சமயத்தில் கண்ணீர் கூட வராத மயில்சாமி அண்ணாதுரையின் கண்கள்தான் நிலவில் தண்ணீரை தேடி அலைந்தது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று 69 முறை அமெரிக்கா ஆய்வு நடத்தி தோற்றிருந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அனுப்பபட்ட சந்திரயான்-1 விண்கலம்தான் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை உலகிற்கு சொன்னது. 

Mylswamy Annadurai Birthday: 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

வீட்டில் நம் அனைவரையும் போல நிலாச்சோறு உண்டு வளர்ந்த மயில்சாமி அண்ணாதுரை நிலாவிற்கே செயற்கைகோள் விடும் அளவிற்கு வளர்ந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுமாயின் அதற்கு மயில்சாமி அண்ணாதுரை அளித்த பதில்கள் இதுதான்..

தனது தந்தையான அண்ணாதுரை தனக்கு சிறுவயதில் இருந்தே நீ எதை செய்தாலும் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாகவும் கொஞ்சம் வித்தியாசமாகவும் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லி வந்ததாக கூறும் மயில்சாமி அண்ணாதுரை. இந்த அறிவுரைதான் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய தனக்கு பெரிதும் உதவியதாக கூறுகிறார். அமெரிக்கா நிலவில் தண்ணீரை தேடி 69 முறை பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து கல்லையும் மண்ணையும் பூமிக்கு கொண்டு வந்து சோதித்தித்தும் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் சந்திரயான் விண்கலம் இந்த 69 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஆராய வேண்டும் என்ற தனது கொஞ்சம் வித்தியாசமான செயல்தான் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை உறுதி செய்ய காரணமாக அமைந்ததாக கூறுகிறார். 

Mylswamy Annadurai Birthday: 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

தாய் மொழியின் வீரியம் அறிவியல் துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அவர்களின் சுயசிந்தனைக்கு பலமாக இருக்கும் என்பது 11ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் மட்டுமே படித்த சாதனை தமிழன் மயில்சாமி அண்ணாதுரையின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. இன்று தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது ABP Nadu

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget