மேலும் அறிய

"உங்க அப்பாக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க விஜய்" - ஆதாரங்களோடு மேடையில் வெளுத்து வாங்கிய எம்.ஆர்.கே!

மாபெரும் ஆளுமைகள் இடம்பெற்ற சட்டசபை தற்போது சினிமா சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார் விஜய் - சி.வி. கணேசன்

“மிசா, சர்கரியா கமிஷன் குறித்த வரலாறை விஜய் அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் ஆதார புகைப்படங்களை காட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.

முதல்வர் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்திய பேசியதாக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, கடலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில், கணேசன் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சுருதி இளம்வழுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன்,  சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என இரண்டாயிரத்துக்கு  மேற்பட்டோர் பங்கேற்று கலந்துகொண்டு சட்டசபையில் விஜய் ஆற்றிய உரைக்கு கண்டனம் தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சர்காரியா கமிஷனை பற்றியும் மிசாவை பற்றியும் தற்போதுள்ள நடிகர் விஜய் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும் அவர் சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிக்கு தண்டனை என்ற திரைப்படம் எடுத்து மிசா அநீதிக்கு எதிராக எடுத்தவர். மேலும் அவரது இல்ல திறப்பு விழாவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது சிறு பிள்ளையாக இந்த நடிகர் விஜய் அருகே நின்றிருந்தார். இதுதான் வரலாறு என கூறி அந்த புகைப்படத்தை ஆர்ப்பாட்டத்தில் காட்டி எடுத்துரைத்தார்.

 எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வக்கில்லாமல் துப்பில்லாமல் சட்டமன்றத்தில் திசை திருப்பும் நாடகங்களை அரங்கேற்றி டிரண்ட் ஆக்குகிறார்கள். ஆனால் நாம் இப்போதும் போராட்ட களத்தில் நிற்கிறோம். முதல்வர் விஜய் தொழில் துறை அமைச்சரையோ தொழில்துறை செயலாளரையோ என அரசு இயந்திரங்கள் எதையும் அழைத்துக் கொள்ளாமல் தன்னந்தனியாக லண்டனுக்கு சென்றுள்ளார். எதற்காக சென்றார் என்று மக்களுக்கு தெரியும் என்றார். எனவே வரலாறு தெரியாமல் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது தந்தையிடமே இந்த வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
இதற்கு முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் கணேசன் நிகழ்த்திய கண்டன உரையில், “மாபெரும் ஆளுமைகள் எல்லாம் அமர்ந்த சட்டமன்றம் தற்போது சினிமா சூட்டிங் ஸ்பாட் ஆக  மாற்றிவிட்டார்கள்.  வரலாறுகளை வேண்டுமென்றே திரித்து தவறான பதிவுகளை பதிவிடுவதுடன், விசில் அடிப்பது, கை தட்டுவது ஆரவாரம் செய்வது என அவையின் மாண்பையே நடிகர் விஜய் குலைத்துவிட்டார்” என்றார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீவிரப்புயலாக மாறிய ‘அர்னாப்': 12 மணி நேரத்தில் மிகத்தீவிர புயலாக மாறும் அபாயம்!
தீவிரப்புயலாக மாறிய ‘அர்னாப்': 12 மணி நேரத்தில் மிகத்தீவிர புயலாக மாறும் அபாயம்!
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
ஆலம்பூண்டி சிறுமி வழக்கு: சிபிசிஐடி விசாரணை வளையத்தில் ராஜதுரை! உண்மை என்ன?
ஆலம்பூண்டி சிறுமி வழக்கு: சிபிசிஐடி விசாரணை வளையத்தில் ராஜதுரை! உண்மை என்ன?
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget