School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
School Holiday: 4 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து அடுத்த விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் மற்றும் தலைவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு வார விடுமுறை மற்றும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது.
குஷியில் பள்ளி மாணவர்கள்
இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள அடுத்த விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷெய்கு தாவூத் ஆண்டவர் தர்காவின் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நிகழ்வு அக்டோபர் 12 தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
உள்ளூர் விடுமுறை
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாளை மறுநாள் அதாவது வரும் 22ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 24ம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! அக்டோபர் 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அக்டோபர் 22 தேதி விடுமுறை
அதேபோல் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா மற்றும் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1,041-வது சதய விழா வருகிற 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சதய விழாவையொட்டி அக்டோபர் 22ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















