மேலும் அறிய
Advertisement
Minister Ponmudi:"மக்களை சாதி, மதங்களால் பிரிக்க மோடி நினைக்கிறார்" - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
மக்களை சாதி, மதங்களாக பிரிக்க மோடி நினைப்பதாகவும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
விழுப்புரம் : மக்களை சாதி, மதங்களாக பிரிக்க மோடி நினைப்பதாகவும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஒதியத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரம் மேற்கொண்டபோது அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சாதி, மதமாக பிரிக்க முயற்சி:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட ஒதியத்தூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அமைச்சர் பொன்முடி ஒதியத்தூர் கிராமத்தில் சாதி வேறுபாடுகள் இல்லாமல் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் ஒற்றுமையாக இருப்பவர்களை பிரிக்க மோடி நினைப்பதாகவும் சாதியாக, மதமாக மக்களை பிரிக்க மோடி நினைப்பதால் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என தெரிவித்தார்.
அதிமுக என்ற கட்சி நான்காக பிரிந்துள்ளது. அதில சிலர் நம் மீது அன்பாக இருப்பதாகவும், ரவிக்குமார் எழுத்து உலகில் சிறந்த ஆளுமை, சமூகம் சார்ந்த அறிவு படைத்த சிறந்த படைப்பாளி. நாம் சொல்வதை பாராளுமன்றத்தில் நமக்காக பேசி வாங்கி தரக்கூடியவர் என கூறினார். மகளிர் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் கலைஞர் கருணாநிதி இலவச எரிவாயு வழங்கி பெண்களின் சமையல் சுமையை குறைக்க வழி வகுத்தார்.
தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் என பொருளாதார ரீதியாக பெண்களை தன்னிறைவு பெற தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப்படுத்தி வருவதாக பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion