மேலும் அறிய
Advertisement
அமைச்சராகி முதல் முறையாக கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம். கருணாநிதி இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் உதயநிதி கையெழுத்து.
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார துவக்கம் 2020 நவம்பர் 20ஆம் தேதி கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லத்தின் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன் என அமைச்சர் உதயநிதி கூறினார்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளை இல்லத்திற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த உதயநிதிக்கு திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையிலான திமுக தொண்டர்கள் நாகை மாவட்ட எல்லையான கொலப்பாடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் தாய் தந்தை அஞ்சுகம் முத்துவேல் , மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பேட், பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின்னர் கலைஞர் இல்ல நினைவகத்தில் குறிப்பெழுதிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், “விடியலை நோக்கி பிரச்சாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் வழியில் மக்கள் பணியாற்றுவேன். செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் வருகை தந்த போது நாகப்பட்டினம் மாவட்ட இளைஞர்களை மேம்படுத்திய மாநில அளவில் விளையாட்டுகளும் உடல் உடல் திறனிலும் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய நாகை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை மேம்படுத்தும் விதத்தோடு பிரத்தியோக விளையாட்டு பயிற்சி நடுவம் (அடகாமி) அமைத்து தர தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion