தமிழகத்திற்கு முதற்கட்டமாக கொண்டு வரப்பட்ட 13,000 கல்வெட்டு மசிப்படிகள்... மாஸ் சம்பவம் !!
மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மசிப்படிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
![தமிழகத்திற்கு முதற்கட்டமாக கொண்டு வரப்பட்ட 13,000 கல்வெட்டு மசிப்படிகள்... மாஸ் சம்பவம் !! minister thangam thennarasu officially said 13,000 inscription have bought to TN from mysore தமிழகத்திற்கு முதற்கட்டமாக கொண்டு வரப்பட்ட 13,000 கல்வெட்டு மசிப்படிகள்... மாஸ் சம்பவம் !!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/b1e617bebb03e20dff3eced58926240c1668598108418589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மசிப்படிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்க்காலஜிக்கல் சர்வீஸ் ஆஃப் இந்தியா மைசூரில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கல்வெட்டு மசிப்படிகள் மீண்டும் தமிழகம் கொண்டு வர வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் மசிப்படிகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் கல்வெட்டு மசியப்படிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக தற்போது 13,000 தமிழக கல்வெட்டுகளின் மசிப்படிகள் சென்னை கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
சுமார் 26 ஆயிரம் மசிப்படிகளில் மீதம் இருக்கக்கூடிய தமிழ்கல்வெட்டு மைப்படிகளை ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றது என்றும், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்பு கல்வெட்டு மசிப்படிகள் கிடைத்துள்ள நிலையில், தமிழக வரலாற்றில் ஆய்வு செய்யும் அனைவருக்கும் இது மகிழ்ச்சிகரமான நாள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தொல் பொருட்களையும் தமிழகம் கொண்டு வருவதற்கு அரசு முறச்சி மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கீழடி அகழ்வாய் வைப்பகம் திறப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை எங்கு வைக்கலாம், எவ்வாறு காட்சிப்படுத்தலாம் என்பதை தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடிந்து முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கொற்கையை தொடர்ந்து கடல் சார் அகழாய்வில் அழகன்குளம் மற்றும் முசிறியிலும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)