5 ஆண்டுகளாக படுக்கையிலே இருக்கும் விக்ரமனின் மனைவி - வீடு தேடிச் சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன்
கஷ்டமான சூழலில் தானாக முன் வந்து உதவிய அமைச்சருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இயக்குநர் விக்ரமன் நன்றி தெரிவித்து கொண்டார்.
5 ஆண்டுகளாக எந்தவித உதவியும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநர் விக்ரமன் வீட்டிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவ உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் விக்ரமன் மனைவி:
விஜய் நடித்த பூவே உனக்காக, சரத்குமாரின் சூர்யவம்சம், விஜயகாந்தின் வானத்தைப் போல, மாதவன் நடித்த பிரியமான தோழி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் விக்ரமன். இது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக படுத்த படுகையாக இருப்பதாக தகவல் வெளியானது.
தமிழ்நாட்டில் தலை சிறந்த குச்சிபுடி நடன கலைஞரான ஜெயப்பிரியா படுத்த படுக்கையாக இருப்பதும், மனைவியை கவனித்து கொள்வதால் விக்ரமன் வெளியே எங்கும் செல்லவில்லை என்ற தகவலும் இணையத்தில் வெளியானது. முதுகில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றிற்கு செயப்பட்ட அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் விக்ரமன் மனைவி படுகையில் கிடப்பதாகவும், அவரின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சனை ஏற்பட்டு, தற்போது சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்க தலைவராக இருந்தவர், தேசிய விருது பெற்ற இயக்குனர் என புகழ்பெற்ற விக்ரமனின் மனைவிக்கு யாரும் உதவ முன் வராததால் தனித்து விட பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
வீட்டிற்குச் சென்ற மா.சுப்பிரமணியன்:
மேலும் விக்ரமன் தன் சொத்துக்கள் ஒவ்வொன்றாக விற்று, தனக்கு மருத்துவம் பார்ப்பதாகவும் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா பேட்டி அளித்திருந்தார். இந்த தகவல் இணையத்தில் வைரலானதும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விக்ரமனின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மேலும், மூத்த மருத்துவர்களை அழைத்து சென்ற மா. சுப்ரமணியன் ஜெயப்பிரியாவின் உடலை பரிசோதிக்க கூறியதுடன், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில், கஷ்டமான சூழலில் தானாக முன் வந்து உதவிய அமைச்சருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இயக்குநர் விக்ரமன் நன்றி தெரிவித்து கொண்டார்.
மேலும் படிக்க: Alphonse Puthren: "இனி படங்கள் இயக்க மாட்டேன்”.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அல்போன்ஸ் புத்திரன்.. என்ன ஆச்சு?
Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி.. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு..!