மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணை நீர்வரத்து : 2ம் நாளாக 15,200 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15,200 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,200 கன அடியாக நீடிக்கிறது.

Mettur Dam : மேட்டூர் அணை நீர்வரத்து : 2ம் நாளாக 15,200 கன அடியாக நீடிப்பு

அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனம் :

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 21,500 கன அடி தண்ணீர் மூடப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 4,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 15,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணை நீர்வரத்து : 2ம் நாளாக 15,200 கன அடியாக நீடிப்பு

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.06 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 48.41 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,743 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 7,118 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் மழை :

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 60.66 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 16.85 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 211 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 2,050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Trump Threaten Ukraine: ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
Chennai Power Cut: சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget