17 சதவீதம் ஈரப்பதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேட்டி
''12 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல்லிற்கு விலை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது''
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் நவீன அரிசி ஆலைகள், நேரடி நெல்கொள் முதல் நிலையம்,தனியார் சர்க்கரை ஆலைகளை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தஞ்சாவூரை அடுத்த அம்மன்பேட்டையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நவீன அரிசி ஆலை பார்வையிட்டு ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம், சுமைதுாக்கும் தொழிலாளர்கள் மனு அளித்தனர். பின்னர், ஆலைக்குள் வந்து, அரிசியின் தரம் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அரிசியை பார்வையிட்டபோது, பழுப்பாக இருக்கின்றது. இன்னமும் வெள்ளாயாக்கி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன், எம்பி பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர், நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில்,
தமிழகத்திலுள்ள 377 நவீன அரிசி ஆலைகளுக்கு கலர் ஸ்டார்ட்ர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பொருத்தி, பயன்பாட்டில் உள்ளது. தஞ்சாவூர் 32 தனியார் நவீன அரிசி ஆலையில் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மழை காலங்களில் நெல்கள் சேதமடைந்து விடக்கூடாது என்று அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் ஆலோசனை செய்து வருகின்றோம். டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி மூலம் நெல்கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே 700 கூட்டுறவு வங்கியின் மூலம் நேரடி நெல் கொள் முதல் பணி நடைபெற்று வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 259 நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள் முதல் செய்யப்பட்டு, திருச்சி மாவட்டத்திற்கு 500 மெட்ரிக் டன் அனுப்பப்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுவர், சென்னை மாவட்டங்களுக்கு, விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக அனுப்புவதற்காக உத்தரவு வழங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 சதவீதம் ஈரப்பதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம், கடந்த மாதம் உணவுத்துறை அமைச்சர் கோயலை, சந்தித்த கடிதம் கொடுத்து விட்டு வந்துள்ளேன். இதனை பரிசீலனை செய்யலாம் என்று சொல்லியிருக்கின்றார். தமிழகத்திலேயே விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல்லிற்கு விலை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சன்னரகத்திற்கு 100 உயர்த்தி, 2060 ஆகவும், பொது ரகத்திற்கு 75 உயர்த்தி 2015 ஆக, அக்டோபர் 1 ந்தேதி முதல் வழங்கி கொண்டிருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி வரை, கொள் முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை விற்பனை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விட்டது.
நெல் உலர்த்தும் இயந்திரத்தை வெள்ளாம் பெரம்பூரில் சோதனை செய்யப்பட்டுள்ளது,விவசாயிகள், இயந்திரத்தில் நெல் மணிகளை உலர்த்தினால், நெல் மணிகள் சேதமாகி விடும் என அச்சத்தில் இருந்து வருகின்றனர். அதிகமான நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அச்சத்தை போக்கி செயல்படுத்தப்படும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதையும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதியில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பாக்கெட் போட்டு வழங்கப்படும் என்று சொல்லியுள்ளார். படிப்படியாக நிறைவேற்றப்படும். தமிழகத்திலேயே 21 நவீன அரிசி ஆலையை கலர் ஸ்டார்ட் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 18 நவீன அரிசி ஆலைகளில் கலர் ஸாட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அப்போது நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்கப்படும் என திமுக தேர்தலின் போது, வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என நிரபர்கள் கேட்டதற்கு, ஆட்சிக்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது. 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு ஆதார விலையை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சொன்ன வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றுவார் என்றார்.