மேலும் அறிய

TN Rain Alert: காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும்; மழை தொடரும்;வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

TN Rain: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், சென்னை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் நேற்று (15.11.2023) காலை தொடங்கிய நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடகிழக்கு திசையில் திரும்பி நவம்பர்-17 ம் தேதி ஒடிடா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. ‘

இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்

நேற்று (14-11-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-11-2023) காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து  சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை  ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில்  திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை  ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு  ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

15.11.2023

கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.11.2023 முதல் 19.11.2023 வரை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

20.11.2023 / 21.11.2023:

தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பர்லூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனம்ழை பெய்ய உள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget