வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. பிரதீப் ஜான் அப்டேட் என்ன தெரியுமா?
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் இதனால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க கூடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் நோக்கு நகரும் காரணத்தால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டின் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானின் எக்ஸ் தள பதிவில், ”இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும், அதற்கு பின் மழைக்கான வாய்ப்புகள் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றார்.
இதனால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.