அதிமுக எம்.பிக்கள் வைத்திலிங்கம் ,கே.பி. முனுசாமி ராஜினாமா..!
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியிலிருந்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமி தேர்தலில் வெற்றிபெற்று தற்போது அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரத்தநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற அந்தக் கட்சியின் வைத்திலிங்கமும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வைத்திலிங்கம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது நான்காவது முறை. முன்னதாக இன்று கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

