கிட்னி திருட்டு: சிபிஐ விசாரணை தேவை! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
கிட்னி திருட்டு விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் முழுமையான உண்மைகள் வெளியில் வரும் - அன்புமணி

கிட்னி திருட்டு விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் முழுமையான உண்மைகள் வெளியில் வரும் என்றும் கனிமொழி வலியுறுத்தினால் முதலமைச்சர் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 108 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
மஞ்சளுக்கு நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை கொண்டு வருவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது இது நமக்கு கிடைத்துள்ள பெருமை. திமுகவைச் சார்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசு எதற்காக மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்?
நியாயமான அரசாக இருந்தால் சென்னை உயர்நீதிமன்றம் சொல்ல கூடிய அந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தமிழ்நாட்டின் பிரச்சினையாக இருந்தால் மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கலாம் ஆனால் இது ஒரு திமுக நபரின் தனியார் மருத்துவமனை.. இதிலிருந்து தெரிகிறது இது கூட்டுக் கொள்ளை. சிபிஐ விசாரணை வந்தால் தான் இதில் உள்ள உண்மைகள் வெளியில் வரும்.
இது ஒரு மாநிலத்தின் பிரச்சினை கிடையாது பல மாநிலங்களில் இது போன்ற கிட்னி திருட்டு நடைபெறுகிறது அதனால் சிபிஐ விசாரணை நடைபெற்றால் தான் முழுமையான உண்மை வெளியில் வரும். மணல், மலையை கொள்ளையடித்தது போக தற்போது கிட்னியை கொள்ளையடிக்க தொடங்கி இருக்கிறார்கள் இதுதான் திராவிட மாடல்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் மதுவால் பெண்கள் தாலி அறுத்துக் கொண்டிருக்கிறார்கள் பலபேருடைய குடும்பம் நாசமாகிறது என பேசியவர் திமுக எம் பி கனிமொழி.. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு பேச மறுக்கிறார். அவர் தன்னுடைய அண்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சென்று பேசினால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் இவ்வளவு பெண்கள் டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுகிறார்கள், தாலிகளை அறுக்கிறார்கள் அதனால் டாஸ்மாக் மது கடைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று ஒரு முறையாவது வலியுறுத்த வேண்டும். கனிமொழி வலியுறுத்தினால் முதலமைச்சர் கேட்பார் என்ற நம்பிக்கை உள்ளது.





















