கேலோ இந்தியா குறித்த விழிப்புணர்வு; கரூரில் மினி மாரத்தான் போட்டி
கேலோ இந்தியா விழிப்புணர்வு வாகனம் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக இளைஞர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி 18 முதல் 31 ஆம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
அதை முன்னிட்டு கேலோ இந்தியா விழிப்புணர்வு வாகனம் கரூர் மாவட்டம் வருகை தருவதை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருந்தனர். தொடர்ந்து மதியம் 2.00 மணிக்கு கேலோ இந்தியா விளையாட்டினை விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்க உள்ளார்.