கரூர்: அமராவதி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
கரூர் வெங்கமேடு செல்வ நகரில் வசிப்பவர் வரதராஜன் இவரது மகன் ஆனந்தகுமார் 20. இவர் சனப்பிரட்டி பகுதி அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார். உடன் இவரை காப்பாற்ற பல இளைஞர்கள் முயற்சித்தனர்.
கரூர் வெங்கமேடு செல்வநகரில் வசிப்பவர் வரதராஜன். இவரது மகன் ஆனந்தகுமார் 20. இவர் சனப்பிரட்டி பகுதி அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார். இவரை காப்பாற்ற பல இளைஞர்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து அங்கு வந்த கரூர் தீயணைப்பு படையினர் ஆற்றில் தேடி ஆனந்தகுமார் உடல் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மின் கம்பம் மீது மோதி பைக் தொழிலாளி உயிரிழப்பு
கரூர் ஆண்டங்கோவில் கீழ்ப்பாகம் ஆத்தூர் பிரிவில் வசிப்பவர் முருகவேல் 43 கூலி தொழிலாளியான இவர் தனது பைக்கில் ஆத்தூர் பிரிவு சாலையில் சென்ற போது நிலை தடுமாறி சாலையோர மின்கம்பம் மீது மோதி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த முருகவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார் விபத்து குறித்து கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்தவர் நடராஜன் 72 இவர் கடந்த சில ஆண்டுகளாக குளித்தலை அருகே உள்ள இ புதுப்பட்டியில் தனது மகன் சந்தானம் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த முதியவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். உடன் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மாயம் கணவர் புகார்
மாயனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் 33 டெக்ஸ்டைல்ஸ் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி 27 இத்தம்பதிக்கு தலா ஒரு மகள் மகன் உள்ளனர். கடந்த 26 ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்துமதி தருமபுரியில் உள்ள தனது தோழி ரஞ்சிதாவை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் வீட்டுக்கும் திரும்பவில்லை மனைவியை காணாததை அறிந்த சரவணன் பல இடங்களிலும் தேடியும் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து மாயனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்துமதியை தேடி வருகின்றனர்.
பைக் திருடிய வாலிபர் கைது
கரூர் மட வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி 60 ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் புரோக்கர் இவர் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அருகே பஜாஜ் பல்சர் பைக் நிறுத்திவிட்டு சென்றார் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து ரவி கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஹரிஹரன் 26 என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதை அடுத்து ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.