கரூரில் ஷேர் ஆட்டோ பிரேக் பிடிக்காததால் மின் கம்பத்தில் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்
கரூர் மாநகராட்சி உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு. ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை இயக்கி வருகிறார்.
கரூரில் ஷேர் ஆட்டோ பிரேக் பிடிக்காததால் சாலையோர மின் கம்பங்களுக்கு நடுவே மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு. கரூர் மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை இயக்கி வருகிறார். வழக்கம்போல் தாந்தோணிமலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, கரூர் வரும் வழியில் உழவர் சந்தை பகுதியில் திடீரென்று ஆட்டோவில் பிரேக் பிடிக்காததால் சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகனங்களுக்கு மேல் இடிக்காமல் இருக்க, சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே ஆட்டோவை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டது.
ஆட்டோவின் முன்பக்கம் மற்றும் இரும்பு மின் கம்பம் வளைந்து சேதம் ஏற்பட்டது. எதிரே வந்த வாகனங்கள், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை இயக்கி செயற்கையாக ஏற்படுத்திய விபத்தின் காரணமாக, ஆட்டோவில் பயணித்த 10 பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுனருக்கு லேசான சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுநரை விசாரணைக்காக கரூர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விபத்தின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்