கரூரில் 11 பயனாளிகளுக்கு ரூ.33,84,702 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
இன்றைய கூட்டத்தில் உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. 528 இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 49 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.33,84,702 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. 528 இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 49 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 1 நபருக்கு ரூ. 4999 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளையும், 2 நபருக்கு தலா ரூ.7650 மதிப்பில் ரூ 15,300 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 1 நபருக்கு 6,450 மதிப்பில் சக்கர நாற்காலியும், 1 நபருக்கு ரூ. 840 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான கண்ணளாடி மற்றும் ஊன்றுகோலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், தாட்கோ திட்டத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.33,57,113 மதிப்பீட்டில் ஆடு வளர்ப்பு , பால்ப்பண்னை அமைத்தல், கனரக வாகனம் வாங்குவதற்கும் என மொத்தம் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.33,84,702 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.