பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தை - நீதிமன்றம் கொடுத்த தண்டனை
தனது தந்தை பாலியல் ரீதியாக கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வருவதாக புகார் அளித்தார்.
கரூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு தந்தை செல்வராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் அளித்த நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தில் சிறையில் உள்ள நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
கரூர் அருகே செல்வராஜ் என்பவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ள நிலையில் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுமதியிடம் தனது தந்தை செல்வராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாக கடந்த 15.04.2024 புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது தந்தை பாலியல் ரீதியாக கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வருவதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.