கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிய அமராவதி ஆறு - தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடக்கிறது
சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தின் காரணமாக காலில் செருப்பு கூட இல்லாமல் 110 டிகிரிக்கு மேல் கடும் வெயிலில் விளையாடி வருகின்றனர்.
போதிய மழைப்பொழிவு இல்லாததால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டு கிடக்கும் ஆற்றில் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறியுள்ளது.
போதிய மழைப்பொழிவு இல்லாததால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் தண்ணீர் வரத்து குறைவால் குடிநீர் தேவை, விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்படாததால் கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நீர்த்தேக்க செட்டிபாளையம் கதவனை, ஆண்டாள் கோயில் தடுப்பணைகளில் தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடைக்கிறது.
கரூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை உள்ளது. மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ் சிறுவர்கள் வறண்டு கிடக்கும் ஆற்றில் காலை மற்றும் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது. இதில் கிரிக்கெட் விளையாண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இதில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தின் காரணமாக காலில் செருப்பு கூட இல்லாமல் 110 டிகிரிக்கு மேல் கடும் வெயிலில் விளையாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்கள் கடும் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவிப்பு பதாகைகள் அமராவதி ஆற்றங்கரையில் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.