மேலும் அறிய

கரூர்: கொட்டிய மழை..அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீர்..!

கரூர் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கரூர் அமராவதி ஆற்றின் இருகரையையும் தொட்டு செல்லும் தண்ணீர்.

அமராவதி அணையில் இருந்து 2,238 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கரூர் அமராவதி ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.

கரூர்: கொட்டிய மழை..அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீர்..!

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச் சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

8,852 கனஅடி நீர் நீர்வரத்து.

இந்தநிலையில் 8,852 கனஅடி நீர் நீர்வரத்து அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி 2.442 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து 2,238 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கரூர்: கொட்டிய மழை..அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீர்..!

இதனால் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு,  காலை 6 மணி நிலவரப்படி 8,852 கனஅடி தண்ணீர் வந்தது.  கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனை கரூர் அமராவதி பாலத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் நின்று பார்த்து செல்கின்றனர்.

மாயனூர் கதவனை

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு முன்தினம் வினாடிக்கு 49 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரத்து 37 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 40 ஆயிரத்து 337 கன அடி தண்ணீரும் 3 பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
 
நங்காஞ்சி அணை

நங்கஞ்சி அணைக்கு வடக்காடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வந்தது. நங்காஞ்சி ஆற்றில் வினாடிக்கு 20 கான அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 33.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 37.86 அடியாக இருந்தது.

கரூர்: கொட்டிய மழை..அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீர்..!

பொன்னணியாறு அணை 

கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து.  இல்லை 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28.06 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 1.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

கார்வாழி ஆத்துப்பாளையம் அணை

கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி 13 கன அடி தண்ணீர் வந்தது 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.14 அடியாக இருந்தது. மழை காரணமாக நீர்வரத்து அதிகம் உள்ளதால் ஆத்துப்பாளையம் அணை இன்று முழுவதுமாக நிரம்பும்  என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அணை நிரம்பும் பட்சத்தில் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
புதுச்சேரியில் பரபரப்பு: தவெக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு... என்ன நடந்தது... ?
புதுச்சேரியில் பரபரப்பு: தவெக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு... என்ன நடந்தது... ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget