மேலும் அறிய

Kamal Haasan on Differently abled: மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் வேண்டும்.. முதல்வருக்கு நீண்ட கோரிக்கை விடுத்த கமல்!

அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை. திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர, அவர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் பிற சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக முன்வைக்கும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,000/- கடுமையான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,000/- உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

Kamal Haasan on Differently abled: மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் வேண்டும்.. முதல்வருக்கு நீண்ட கோரிக்கை விடுத்த கமல்!

பார்வைக் குறைபாடு உடையவர்கள் கல்வி கற்க தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என சுமார் 10 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மாவட்டங்கள்தோறும் சிறப்புப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை. திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களும் அரசின் சாதாரணப் பேருந்தில்  கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற சலுகையானது, நகரப்பேருந்துகளில் மட்டுமல்லாது அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்படவேண்டும்.

தொழில்முனைவோராக விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவி எண் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும்.

கடுமையான மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் வகையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, ஸ்மார்ட் கார்டு வழங்குவது, மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குவது, அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது ஆகியவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்குச் செவிசாய்க்காமல் இருந்துவிட்டது துரதிரஷ்டவசமானது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 ன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு உரியவற்றை செய்து கொடுக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.

Bhavinavben Wins Silver| டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்தியாவுக்கான முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார் பவினா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Kandha Shasti Festival: அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Embed widget