மேலும் அறிய

Kallakurichi Illicit Liquor: CBCID வசம் செல்லும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: முதல்வர் அதிரடி உத்தரவு

Kallakurichi Illicit Liquor Death: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க  மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி இருப்பதாகத் தெரிவித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் திரு பிரவீன்குமார். வயது 26, 3 மணியளவில் த/பெ. கணேசன் நேற்று அதிகாலை வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், திரு சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் திரு சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள். உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும்.

மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, மற்றும் கந்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு. பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும். சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவமனைகளிலிருந்து மருத்துவக் கள்ளக்குறிச்சிக்கு கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்களுக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன். ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர். காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர். மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க  மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
RCB Vs SRH: ஹாட்ரிக் சம்பவமா? டெல்லியை தாக்குபிடிக்குமா பஞ்சாப்? அடி வாங்கிய ஆர்சிபி - முதல் 2 இடம் யாருக்கு?
RCB Vs SRH: ஹாட்ரிக் சம்பவமா? டெல்லியை தாக்குபிடிக்குமா பஞ்சாப்? அடி வாங்கிய ஆர்சிபி - முதல் 2 இடம் யாருக்கு?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIESPonmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.Kதூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
RCB Vs SRH: ஹாட்ரிக் சம்பவமா? டெல்லியை தாக்குபிடிக்குமா பஞ்சாப்? அடி வாங்கிய ஆர்சிபி - முதல் 2 இடம் யாருக்கு?
RCB Vs SRH: ஹாட்ரிக் சம்பவமா? டெல்லியை தாக்குபிடிக்குமா பஞ்சாப்? அடி வாங்கிய ஆர்சிபி - முதல் 2 இடம் யாருக்கு?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
Bus Driver Sudden Death: ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
Embed widget