"ஏழு வயசுல சொன்னேன்.. தலைவர் என்னை கூப்பிட்டாரு” : ரஜினிகாந்தைச் சந்தித்து புகைப்படம் எடுத்த சஞ்சு சாம்சன்..
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினிகாந்தை தனது இல்லத்தில் சந்தித்த புகைப்படத்தை, டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், அவரது மிகப்பெரிய தருணங்களில் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கேரள கிரிக்கெட் வீரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மேலும் நடிகர் ரஜினிகாந்தை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசையை நிறைவேறியதாக தெரிவித்தார். அவர் வரவிருக்கும் ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ரன்னர்ஸ் அப் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விரைவில் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
At the age of 7 already being a Super Rajni fan,,I told my parents ..See one day I will go and meet Rajni sir in his house…
— Sanju Samson (@IamSanjuSamson) March 12, 2023
After 21 years,that day has come when The Thalaivar invited me..☺️🙏🏽 pic.twitter.com/FzuWWqJkif
7 வயதிலிருந்தே தலைவரின் ரசிகனாக இருந்ததாகவும், அவரை ஒருமுறையாவதும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் சாம்சன் பதிவிட்டுள்ளார். சிறுவயதில் சாம்சன் தனது பெற்றோரிடம் ஒரு நாள் சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சென்று நிச்சயமாக சந்திப்பேன் என அடிக்கடி கூறியதாகவும் அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 12, 2023: 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்துள்ளதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
சாம்சன் முன்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் ரஜினிகாந்த் ரசிகர் என்பதை தெரியப்படுத்தினார். ஊரடங்கு நாட்களை எவ்வாறு கழித்தார் என்ற கேள்விக்கு தியானம், ஸ்டீவ் வாக்கில் (steve waugh) புத்தகத்தை தவிர ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மற்றும் மலையாளப்படங்களை பார்த்து தான் நாட்களை கழித்தார் என கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2023 ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது:
சஞ்சு சாம்சன் வரவிருக்கும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்துவார், இதில் ராயல்ஸ் தனது முதல் போட்டியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஏப்ரல் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டியிடுகிறது. ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், டிரென்ட் போல்ட், ஆர். அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை உள்ளடக்கிய வலுவான அணி கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெருமை சேர்த்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற சமீபத்திய ஏலத்தில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் பெயர்களையும் இந்த அணியில் உள்ளடக்கினர்.
இந்த போட்டிக்கு முன்னதாக, ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்திற்குப் பிறகு, வரவிருக்கும் ஐபிஎல்லில் ராஜஸ்தானின் இரண்டாவது ஹோம் கிரவுண்டாக இருக்கும் குவாஹாட்டியின் ஏசிஏ ஸ்டேடியத்தில் பயிற்சி முகாமை அந்த குழு அமைத்துள்ளது. ராயல்ஸ் தனது முதல் இரண்டு மேட்ச்களை கவுகாத்தியில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஏப்ரல் 5 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுடன் மோதும் என்றும் ஏப்ரல் 8 ஆம் தேதி டெல்லியுடன் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.