நன்றி கெட்ட துருக்கி.. இந்தியா செஞ்சத மறந்துட்டீங்களா ? இப்படி துரோகம் பண்ணலாமா எழும் விமர்சனம்
India Turkey Relations: துருக்கி நாட்டிற்கு இந்தியா செய்த உதவிகளை நன்றி மறந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வருகிறது என விமர்சனம் எழுந்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா நடத்தியது. அதைத் தொடர்ந்து, மறுநாளே இந்தியாவின் மீது தாக்குதலை தொடங்கியது பாகிஸ்தான்.
15 இடங்களில் தாக்குதல்
இந்தியாவில் 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்த முற்சித்தது. பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணும் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. அதையும் இந்திய ராணுவம் தடுத்தி நிறுத்தி அழித்து, பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் வரும் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்த இந்திய ராணுவம்
பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் ட்ரோன்கள் என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால் எப்படி பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது என்ற கேள்வி எழுந்திருந்தது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம், 36 இடங்களில் 400 க்கும் மேற்பட்ட துரோன்களை ஏவியது. அழிக்கப்பட்ட டிரான்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் துருக்கியின் " அசிஸ்கார்டு சோங்கர் "ட்ரோன்கள் என தெரியவந்தது.
துருக்கி ராணுவ படைகளால் பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம் தாங்கி ட்ரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துருக்கி இராணுவம் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதே போன்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு கப்பல் ஒன்றை பரிசளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ட்ரோன்கள் துருக்கி நாட்டு உடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி கெட்ட துருக்கி
இந்தநிலையில் இந்திய இளைஞர்கள் துருக்கி நாட்டை விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு துருக்கி நாட்டு நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது "ஆபரேஷன் தோஸ்த்" என்ற மீட்பு நடவடிக்கை துவங்கி முதல் நாடாக இந்தியா களம் இறங்கியது. இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க இந்திய அரசாங்கம், கருடா ட்ரோன்களையும் மீட்பு பணிகளுக்கு சி 17 போர் விமானங்களையும் அனுப்பி வைத்தது. அதுவும் முதல் நாடாக இந்தியா இந்த உதவியை செய்து இருந்தது.
இதுபோக, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இன்று துருக்கி நாடு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல், செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்திருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி நடவடிக்கையில் இறங்கும் இந்தியா
உலக அளவில் தற்போது பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வருகிறது. அந்த நாட்டிற்கு துருக்கி மட்டுமே உதவி செய்து வருகிறது. துருக்கி நாட்டுக்கு எதிராக தற்போது ஆதாரத்தை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது. துருக்கி தூதரக ரீதியாக உலக அளவில் தனிமைப்படுத்த இந்திய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















