கரூர்: மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
காவிரி ஆற்றில் 28 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்தது. மயிலம்பட்டியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாயனூர் கதவணையின் நீர் நிலவரம்.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கரூர் மாவட்டத்தில் மயிலம்பட்டியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து 18 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 28 ஆயிரத்து 289 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்திற்கு 26 ஆயிரத்து 769 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1,520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,452 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் காலை நிலவரப்படி வினாடிக்கு, 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 81.83 அடியாக இருந்தது. கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 602 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 522 கனஅடியாக சரிந்தது.
நங்காஞ்சி அணையின் நீர் நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 11 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 34.25 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர் நிலவரம்
க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 24 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம். கரூரில் 2.04 மில்லி மீட்டரும், க.பரமத்தியில் 1.04 மில்லி மீட்டரும், குளித்தலையில் 2.00 மில்லி மீட்டரும், தோகைமலையில் 4.00 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 1.00 மில்லிமீட்டரும், பஞ்சப்பட்டியில் 18.00 மில்லிமீட்டரும், கடவூரில் 22.00 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 18.01 மில்லி மீட்டரும், மைலம்பட்டியில் 32.00 மில்லி மீட்டரும் ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 8.44 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அமராவதி ஆற்றில் 2 ஆயிரத்து 153 கன அடி தண்ணீர் வருகை
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் காலை 8 மணி நிலவரப்படி 81.83 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 1,454 கன அணி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 29 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான வரதமா நதி முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணையில் இருந்து 355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதேபோல் பாலாறு அணையில் இருந்து 1,123 கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. குதிரையாறு அணையில் இருந்து 135 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், குடகனாறு அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமராவதி ஆற்றில் 2 ஆயிரத்து 053 கன அடி தண்ணீர் கருர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.